Thursday, September 8, 2016

Railway smart card awareness

   மதுரையில் என் சகோதரர் (சாரதாகுமார் )
இயக்க எடுக்கப்பட்ட
விழிப்புணர்வுக் காணொளி இது

செய்தி சொல்வதுதான் முக்கியம் என்பது
இதுபோன்ற விழிப்புணர்வுப் படங்களின்
பிரதான நோக்கமாக இருந்தாலும் கூடக்
 கொஞ்சம் கலை உணர்வோடு
சொல்லப்படுகையில் அது இன்னமும்
சிறப்புப் பெறும்

அந்த வகையில் இந்தக் காணொளி
ஒரு நல்ல முயற்சி என்றாலும்

சிந்திய பொருளை அந்தப் பெண் எடுத்துக்
கொடுத்தபடிப் பேச்சினைத் தொடரும்படியாக
இருந்தாதிருந்தால்,

பயணியின் உடல் மொழியிலும்
பயணச் சீட்டு எடுக்கவேண்டுமே  என்கிற
ஒரு பதட்டம் பேசும்போதும் தொடர்ந்து
இருக்கும்படியாக இருந்திருந்தால்
இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்
என்பது என எண்ணம்

இதோ அந்தப் பயனுள்ளக் காணொளி ...



4 comments:

ஸ்ரீராம். said...

நேற்றே ஒருமுறை காணொளியை இணைக்க முயற்சி செய்தீர்களோ... போஸ்ட் பற்றிய குறிப்பு வந்ததே என்று வந்து பார்த்தால் நோ ஸச் போஸ்ட் என்று இருந்தது!

யூ டியூப் வீடியோ இணைக்கும்போது ஷேர் என்று அங்கு இருக்கும் பாட்டனைக் க்ளிக்கி, அதற்கும் கீழே எம்பெட் என்று இருக்கும் பாட்டனைக் க்ளிக்கி கீழே நீல எழுத்துகளில் வரும் லிங்க் காபி செய்து இங்கு ப்ளாக்கில் பேஸ்ட் செய்தீர்கள் என்றால், காணொளியை இங்கேயே பார்க்க முடியும்!

ஹிஹி.. காணொளியை நான் இன்னும் பார்க்கவில்லை!

வெங்கட் நாகராஜ் said...

இந்த மாதிரி சேவைகள் இன்னும் அதிகம் கொண்டு வர வேண்டும். தில்லியில் இந்த சேவை ஆரம்பித்தாலும், நம் மக்கள் அந்த இயந்திரத்தினை ஒரு வழி செய்து விட்டார்கள் - ஒரே சமயத்தில் இருக்கும் அத்தனை பொத்தான்களையும் அழுத்தி இயந்திரம் என்ன செய்யும் என்று சோதிக்க, இப்போது அந்த சேவை நிறுத்திவிட்டார்கள்.....

நல்ல காணொளி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு காணொளி! பகிர்வுக்கு நன்றி!

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல காணொளிதான்...பகிர்வுக்கு மிக்க நன்றி. இங்கு கிண்டியில் இருக்கிறது ஆனால் அங்கு ஒருவர் னிற்கிறார் அவரிடம் நாம் சொன்னால் உடனே அவரே தட்டி டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறார்...இன்னும் மக்கள் கைக்கு நேரடியாக வரவில்லை/ அதற்கான விழிப்புணர்வு அதிகம் தேவை எனத் தோன்றுகிறது...எல்லா மக்களாலும் இயக்க முடியுமா என்றும் தெரியவில்லை....நிறைய மெஷின்கள் வேண்டும்தான். அங்கும் வரிசை கட்டினால்??!!

கீதா

Post a Comment