Monday, August 14, 2017

பொறுப்பறியா சுதந்திரமும் சுதந்திரமில்லா பொறுப்புக்களும்

கம்னியூச நாட்டிலிருந்து
ஒரு கொழுகொழுத்த நாயும்

நம்போன்ற
ஜனநாயக நாட்டிலிருந்து
எலும்பும் தோலுமாய் ஒரு நாயும்

எல்லைக் கோட்டில் அதிருப்தியுடன்
சந்தித்துக் கொள்கின்றன

"எங்கள் நாட்டில்
உணவுக்குப் பஞ்சமில்லை
நேரத்திற்குக்   கிடைத்துவிடும்
ஆனால் நம்  இஷ்டம்போல்
குலைக்கத் தான் முடிவதில்லை "
என்று குறைபட்டுக்குக்  கொண்டது
கொழுத்திருந்த  அது

"எங்கள் நாட்டில்
எப்போது வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்
யாரைப்பார்த்தும்குலைக்கலாம்
சோத்துக்குத்தான் பாடாய்ப்படனும்"
என்று சலித்தது
எலும்பும்  தோலுமாய்
காட்சியளித்த இ து 

இரண்டும் ஒத்தமனதுடன்
இடம் மாறிக்கொள்ளச் சம்மதித்து
நாடு மாறிக் கொண்டன

பொறுப்பறியா சுதந்திரமும்
சுதந்திரமில்லா பொறுப்புக்களும்
மீண்டும் சலிப்படையத்தான் செய்யும்
என்பதை உணராமலேயே...

இதே காரணத்திற்காக
இவை இரண்டும் மீண்டும்
மாறித் தொலைக்க வேண்டி இருக்கும்
என்பதை அறியாமலேயே

(சிறந்த சமூக மனிதனாய்
தகுதிப்படுத்திக் கொள்வோம்
சுதந்திரச்  சுகத்தை
முழுமையாய் அனுபவிப்போம்
அனைவருக்கும் இனிய
சுதந்திரத் தின நல்வாழ்த்துக்கள் )   

11 comments:

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல உதாரணம்..அருமை..

இனிய சுதந்திரதின நல் வாழ்த்துகள்!

ராஜி said...

இனிய சுதந்திரதின வாழ்த்துகள் வாழ்த்துகள்ப்பா


பெருமையா சொல்லாம ஒப்புக்கு சொல்லும் நிலை

தி.தமிழ் இளங்கோ said...

இக்கரைக்கு அக்கரை பச்சை. எனது இனிய சுதந்திரதின வாழ்த்துகள்.

மனோ சாமிநாதன் said...

//பொறுப்பறியா சுதந்திரமும்
சுதந்திரமில்லா பொறுப்புக்களும்
மீண்டும் சலிப்படையத்தான் செய்யும்
என்பதை உணராமலேயே...//

மிக அருமை!
சுத‌ந்திர தின நல்வாழ்த்துக்கள்!

Unknown said...

பெண்ணென்றும் பாராமல் மக்களுக்காக போராடியவரை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யும் கொடுமை இங்கே நடந்து கொண்டுள்ளது ,நியாயத்தைக் கேட்பவர்கள் கைது ,சிறைவாசம் தொடர்கிறது !குலைப்பதற்கு கூட இங்கே சுதந்திரம் இங்கே இருக்கா :)

பூ விழி said...

செம

ஸ்ரீராம். said...

அக்கரை பச்சை.

G.M Balasubramaniam said...

பொறுப்பில்லா சுதந்திரம் சரிதான்

settaikkaran said...

செமத்தியான தலைப்பு; செமத்தியான பதிவும்கூட! ‘பிக்-பாஸ்’ நிகழ்ச்சியில்தான் சரியாக ஓட்டுப்போடக் கற்றுக்கொண்டோம் என்று ஒரு நடிகை சொல்ல, அதை இன்னொரு நடிகர் ஆமோதிக்க, கூச்சமில்லாமல் கைதட்டுகிற மக்கள் இருக்கிற நாட்டில், பொறுப்புள்ள சுதந்திரம் வருவதற்கு நாளாகும்.

vimalanperali said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்/

கோமதி அரசு said...

//பொறுப்பறியா சுதந்திரமும்
சுதந்திரமில்லா பொறுப்புக்களும்
மீண்டும் சலிப்படையத்தான் செய்யும்
என்பதை உணராமலேயே...//

அருமை.

Post a Comment